Random image

புல்லட் ரெயில் ஒரு நஷ்டம் தரும் திட்டம் : மகாராஷ்டிர மாநில போக்குவரத்து துறை

மும்பை

மோடியின் கனவு திட்டம் எனக் கூறப்படும் புல்லட் ரெயில் திட்டத்தை நஷ்டம் தரும் திட்டம் என மகாராஷ்டிர மாநில போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் அபே ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்த புல்லட் ரெயில் அடிக்கல் நாட்டு விழாவில் இந்த திட்டத்தினால் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் மிகவும் லாபம் ஈட்டும் என மோடி பேசினார். இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்தது, செலவு போன்ற தல தகவல்களைக் கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மகாராஷ்டிர அரசு போக்குவரத்துத் துறை பதில் அளித்துள்ளது.

அந்த பதிலில், “புல்லட் ரெயில் மும்பை மற்றும் அகமதாபாத் இடயிலான 508 கிமீ தூரத்துக்கு செல்ல உள்ளது. இதற்கு மொத்த செலவு ரூ.1.1 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுளது. மணிக்கு சுமார் 320-350 கிமீ வேகத்தில் செல்லும் இந்த ரெயில் 12 நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான நிதியாக ரூ.80000 கோடியை ஜப்பான் இண்டர்நேஷன கார்போரேஷன் ஏஜன்சி 0.1% வட்டிக்கு கடனாக ளிக்கிறது. இதை 50 வருடங்களில் திருப்பி செலுத்த வேண்டும்.

இந்த திட்ட அனுமதிக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று ஒரு கூட்டம் நடந்து அந்த ஒரே கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதை தவிர வேறு எந்த கூட்டமோ கலந்தாய்வோ அதற்கு முன்பு நடைபெறவில்லை. இந்த ரெயில் இயங்கத் தொடங்கும் போது இந்த செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் இந்த புல்லட் ரெயில் மூலம் கிடைக்கும் வருவாய் செலவுடன் ஒப்பிடும் போது குறைவாக இருக்கும் என்பதால் இதனால் நஷ்டம் ஏற்பட வாய்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed