புல்லட் ரெயில் திட்டத்துக்கு ராஜ்தாக்கரே கட்சி எதிர்ப்பு….நிலம் அளக்கும் பணி நிறுத்தம்

--

மும்பை:

மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை ஜப்பான் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த திட்டத்திற்கு ரெயில் பாதை அமைக்க தனியார் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.

ராஜ்தாக்கரே
ராஜ்தாக்கரே

இந்த வகையில் மும்பை தானே மாவட்டம் சிப்தத்தா பகுதியில் சில் கிராமத்திற்கு அருகே நிலம் அளக்கும் பணியில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் இன்று ஈடுபட்டனர். அப்போது ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் கட்சியினர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நிலம் அளவீடு செய்யும் பணி தடைபட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து சமரசத்தில் ஈடுபட்டனர் எனினும் போராட்டம் தொடர்ந்ததால் வேறு வழியின்றி பணியை நிறுத்திவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.