புல்லட் ரயில் ஒரு நாளைக்கு 100 முறைச் சேவை செய்ய வேண்டும்- ஆய்வுத் தகவல்

bullet featuredஇந்திய மேலாண்மைக் கழகம் அகமதாபாத் (ஐஐஎம்-ஏ) அறிக்கையின் படி, ரயில்வே தனது நிதிநிலைமையை பலமாக வைத்துக்கொள்ள , மும்பை மற்றும் அகமதாபாத் இடையே திட்டமிடப்பட்டுள்ள புல்லட் ரயில் ஒரு நாளைக்கு 88,000 முதல் 118,000 பயணிகள் வரை இடமளிக்கவோ அல்லது தினசரி 100 தடவை பயணம் மேற்கொள்ளவோ வேண்டும்.

“இந்தியாவின் அர்ப்பணிக்கப்பட்ட ஹை ஸ்பீட் ரயில்வே (ஹெச்எஸ்ஆர்) நெட்வொர்க்ஸ்: முன்னேற்றத்திலுள்ள சிக்கல்கள்,” என்ற தலைப்பில் உள்ள அறிக்கை, ரயில்வே பதினைந்து ஆண்டுகளுக்கு செயல்பட்டாலும், நபர் ஒன்றுக்கு 300 கிமீ ரூ 1500 என்று டிக்கெட் விலை நிர்ணயித்து, ஒவ்வொரு நாளும் 88,000 மற்றும் 110,000 பயணிகள் வரை பயணிக்க வேண்டும் அப்போது தான் அது சரியான நேரத்தில் வட்டி கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியும் என்று கூறுகிறது.

ரூ 97.636 கோடி சலுகை கடன் வழங்க முன்வந்துள்ள ஜப்பான், திட்ட செலவில் 80 சதவீதத்திற்கு நிதி வழங்குவதகாவும், அதை 0.1 சதவீத வட்டி விகிதத்தில், செயல்பாடுகள் தொடங்கி 16 ஆண்டுகளுக்குப் பின்னர், 50 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தும் காலத்தையும் கொடுத்துள்ளது . மீதமுள்ள 20 சதவீதம் கடனுக்கு, 8 சதவீத சராசரி வட்டி விகிதம் (மத்தியில் வழங்கப்படவுள்ள ரூ .20,000 கோடி நிதியுதவியில்) எனக் கருதப்படுகிறது. 15 ஆண்டு கடன் நிறுத்திவைப்புக்கு ஜப்பான் முன்வந்துள்ளது, எனவே 16 ஆம் ஆண்டிலிருந்து தான் இந்திய ரயில்வேயிற்கு வருவாய் கவலைகள் வரத் தொடங்குமென அறிக்கையின் ஆசிரியர்கள் கூறுகின்றனர் .

bullet train 2

ரயில் மூலம் கடக்கப்படும் மொத்த தூரம் 534 கிலோமீட்டர் ஆகும். ஜி ரகுராம், கழகத்தின் பப்ளிக் சிஸ்டம்ஸ் குரூப் பேராசிரியர் மற்றும் பிரசாந்த் உதயகுமார் அகியோர் நாளேட்டின் ஆசிரிய உறுப்பினர்களாவர். புல்லட் ரயில் செயல்பாடு தொடங்கி பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, உண்மையான இயக்க செலவு தெரியவில்லை என்றாலும், வருவாயில் 20 சதவீதம் மற்றும் 40 சதவீதத்தில் இயக்க செலவை நிலைப்படுத்தும் இரண்டு சாத்தியங்களையும் நாளேடு கருதுகிறது. “ஆகவே, ரயில்வே ரூ .100 வருவாய் சம்பாதித்தது என்றால், ரூ.20 அல்லது ரூ.40 பராமரிப்பிற்கும், மீதமுள்ள உபரித் தொகை, கடனை வட்டியுடன் அடைக்க உபயோகப்படும். இப்போது, இரண்டு சாத்தியங்களில் இயக்க செலவினால் கடனை அடைப்பதற்கு, பயணிகள் சராசரியாக 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்வதாக நாங்கள் கருதுகிறோம். இந்த சூழலில், இரண்டு சாத்தியங்களுக்கும் நமக்கு முறையே 88,000-118,000 பயணிகள் தேவைப்படும், ” என்று ரகுராம் கூறினார். “பொதுவாக ஒரு ரயில் 800 பயணிகளைக் கொண்டுசெல்லும், எனவே தினசரி 88,000 பயணிகளை அழைத்துச் செல்ல, நீங்கள் மொத்தமக 100 தடவை, அல்லது ஒவ்வொரு வழியிலும் 50 தடவை பயணமெ மேற்கொள்ள வேண்டும்.

bullet train 1

எனவே, நமக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு திசையிலும் மூன்று ரயில்கள் வேண்டும்,” என்று அவர் கூறினார். நாளேட்டின் படி, “இந்தியாவின் ஒட்டுமொத்த ஆசையின் வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக இருக்கப் போகும் இந்த ஹை ஸ்பீட் ரயில்வேயிற்கு பல சாதகமான பலன்களும் புறத்தன்மையும் உள்ளன.”