தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பு இருந்தாலும் அதிலும் நம்பிக்கையில்லாமல் அவர் பயன்படுத்தும் கழிப்பறை கூட குண்டுதுளைக்காத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

changrasekarrao

முதல்வருக்கும் அவரது மகனுக்கும் அவர்கள் பயன்படுத்தும் ஒரு லட்சம் சதுரஅடி அளவுள்ள வீட்டில் குண்டு துளைக்காத கண்ணாடிகளுடன் கூடிய ஜன்னல் கதவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த ஒரு போலீஸ் உயரதிகாரி “இது அரசு பங்களாதான், இதன் பாதுகாப்புக்கு எவ்வளவு செலவு செய்தாலும் அது தவறல்ல” என்று குறிப்பிட்டார்.
தெலுங்கானா முதல்வருக்கு அப்படியென்ன உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதோ தெரியவில்லை. கடந்த ஜூலை மாதம் கிராமங்களை ஆய்வு செய்வதற்காக அவர் மேற்கொண்ட 10 நாள் பயணத்துக்காக 5 கோடி செலவில் நவீன படுக்கை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய குண்டுதுளைக்காத பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அப்போது காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்தது. சில மாதங்களுக்கு முன்னர்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது சாதாரண பஸ்ஸில் பயணம் செய்தார். முதல்வரானவுடன் மக்கள் பணத்தை வீணடித்து 5 கோடி செலவில் பஸ் தேவையா என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.