2019 ஐ போலவே 2020ம் தொடர வேண்டும் – இது பும்ராவின் விருப்பம்..!

--

மும்பை: 2019ம் ஆண்டைப்போலவே, புதிதாகப் பிறந்துள்ள 2020ம் ஆண்டும் தனது கிரிக்கெட் வாழ்வின் சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார் இந்திய வேகப்பந்து நட்சத்திரம் பும்ரா.

இந்திய வேகப்பந்து கூட்டணியின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்துவருபவர் பும்ரா. இவர் கடந்த 2016ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பெற்றார்.

கடந்த சில மாதங்களாக முதுகுப் பகுதி பிரச்சினை காரணமாக போட்டிகளிலிருந்து ஓய்வெடுத்து வந்த பும்ரா, புத்தாண்டில், முதன்முதலாக இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டியில் களமிறங்க காத்துள்ளார்.

இந்நிலையில், “கடந்த 2019 எனக்கு மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது. வேகப்பந்து வீச்சு தொடர்பான புதிய நுட்பங்களைக் கற்றுக்கொண்டதோடு, சாதனைகளும் புரிய முடிந்தது. அந்த நிலையே, இந்த 2020ம் ஆண்டிலும் தொடரும் என நம்புகிறேன்” என்றார்.

இவர் கடந்தாண்டில் மட்டும் 12 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 62 விக்கெட்டுகளையும், 58 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 103 விக்கெட்டுகளையும், 40 டி-20 போட்டிகளில் பங்கேற்று 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பது கவனிக்கத்தக்கது.