மும்பை: பங்குச் சந்தையில், பங்கு வெளியீட்டுக்கு அனுமதியளிக்கக்கோரி, ‘பர்கர் கிங் இந்தியா’ என்ற நிறுவனம், செபியிடம் விண்ணப்பித்துள்ளது. இது ஒரு ‍அமெரிக்க நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் இந்தியாவில் தனது துரித உணவு சேவையை நடத்தி வருகிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலமாக, ரூ.542 கோடியை திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.
QSR Asia என்ற நிறுவனத்தின் வசமுள்ள பங்குகளில் ரூ.6 கோடி மதிப்பிலானவற்றையும், இதர தொகைக்கு மற்ற பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, புதிய உணவகங்களை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாய் கூறப்படுகிறது.
செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்நிறுவனத்துக்கு, இந்தியாவின் 17 மாநிலங்களில் உள்ள மொத்தம் 57 நகரங்களில், 261 உணவகங்கள் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.400 கோடி நிதித் திரட்ட விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது ரூ.542 கோடியாக அதிகரித்து அனுமதி கோரியுள்ளது.