சென்னை,

டிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவ பொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது.

கடந்த வாரம் ரசிகர்களுடனான ரஜினி சந்திப்பின்போது, அரசியல் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார்.

இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஒருசில தலைவர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில்  நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை எதிர்த்து அவரது வீட்டை முற்றுகை யிட சென்ற தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமி, தமது ஆதரவாளர்களுடன் சென்றார்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதன் காரணமாக ரஜினியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, நடிகர் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பதாகவும் கூறி, தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமி கூறினார்.

வீரலட்சுமியின் ரஜினி வீடு முற்றுகை அறிவிப்பு காரணமாக, ரஜினியின் வீட்டுக்கு வழக்கமாக இருக்கும் பாதுகாப்பை விட, கூடுதலாக போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

 

இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.