Random image

தெலுங்கானா மலைப்பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்து: 40 பேர் பலி

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் வரை பலியான தாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில்  பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பேருந்து  திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு மீட்பு பணியில் ஈடு பட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்ற னர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த அந்த பேருந்தில், 40பேர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் 25 பெண்கள் 8 குழந்தைகளும் அடங்குவர்.

மேலும், பலர்  மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.