உத்தரகாண்ட் பேருந்து விபத்து :  45 பேர் மரணம்

டேராடூன்

த்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்திக்குள்ளானதில் 45 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் பௌரி கர்வாலா மாவட்டத்தில் உள்ள நனிதண்டா மலைப்பகுதியில் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.    இன்று காலை ஒன்பது மணி அளவில் அங்குள்ள பிப்லி – பவுன் சாலையில் சென்றுக் கொண்டிருந்த இந்த பேருந்து தீடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தது.

அதனால் சுமார் 200 அடி பள்ளத்தாக்கில் அந்த பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 45 பேர் விபத்து நடந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர்.  அத்துடன் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.   படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு  உள்ளனர்.

விபத்துக்குள்ளானவர்களும் மரணம் அடைந்தவர்களின் உடலும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.   காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடு பட்டுள்ளனர்.   மரணம் அடைந்தவர்களின் விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.