Random image

இன்றைய முழு அடைப்பு : பஸ், ஆட்டோ, கால் டாக்சிகள் ஓடாது

சென்னை

திர்கட்சிகள் சார்பில் இன்று நடத்தப்படும் முழு அடைப்பு காரணமாக தமிழகத்தில் பஸ், ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய அள்வில் எதிர்க்கட்சிகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்து இன்று முழு அடைப்புக்கு  அழைப்பு விடுத்துள்ளனர்.   இன்றைய முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக, கம்யூனிஸ்டுகள்,  மதிமுக, தமாக, பாமக உள்ளிட்ட பலகட்சிகள் ஆதர்வு தெரிவித்துள்ளன.   திமுக தலைவர் ஸ்டாலின் இந்த போராட்டத்தில் அனைத்து திமுக தொண்டர்களும் கலந்துக் கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 1.40 லட்சம் பேருந்து ஓட்டுனரக்ளில் சுமார் 65 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துக் கொள்வார்கள் என தொழிற்சங்க நிர்வாகிகள் தகவல் அளித்துள்ளனர்.   ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கபடுளது.   அத்துடன் லாரி ஓட்டுனர்கள், கால் டாக்சி ஓட்டுனர்கள் ஆகியோரின் சங்கங்களும் முழு அடைப்புக்கு ஆதரவு அளித்துள்ளன.

இன்று காலை 6 மணி முதல் மாலை 4 அணி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டும் என வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.    இதனால் இன்று தமிழகம் பெரிதும் முடங்கும் என கூறப்படுகிறது.