பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் பலி! உத்தரகாண்ட் அரசு நிவாரணம்!

உத்தர்காசி,

த்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  அதில் பயணம் செய்தி 23 பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்துள்ளது உத்தரகாண்ட் அரசு.

உத்தர்காண்ட் மாநிலத்தில் உத்தர்காசியில் இருந்து கங்கோத்ரிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.

இந்த சோக விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 22 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 8 பேர் உத்தரகாண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தகவல் அறிந்த  இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை, மீட்டு வருகின்றனர்.

விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு   தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்தர சிங் ராவத் அறிவித்துள்ளார்.