சென்னை:

பேருந்து கட்டணம் உயர்வால் பெரும்பாலான பொதுமக்கள் ரெயில் பயணத்தை நாடியுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து புறநகர்களுக்கு செல்லும் ரெயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதன் காரணமாக சென்னையில் இருந்து புறநகர்களுக்கு கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் விவரங்களை தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்து ரெயில்வே விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது,

 

 வேளச்சேரி-சென்னை கடற்கரை பயணிகள் சிறப்பு ரெயில், வேளச்சேரியில் இருந்து காலை 9.55, 11.45 மற்றும் மதியம் 1.30, 3.15 மணிக்கு புறப்படும்.

 சென்னை கடற்கரை-வேளச்சேரி பயணிகள் சிறப்பு ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.50 மற்றும் மதியம் 12.35, 2.20, 4.10 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

சென்னை கடற்கரை-அரக்கோணம் பயணிகள் சிறப்பு ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.45 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

* அரக்கோணம்-சென்னை கடற்கரை பயணிகள் சிறப்பு ரெயில், அரக்கோணத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, மதியம் 3.15 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.

தாம்பரம்-செங்கல்பட்டு பயணிகள் சிறப்பு ரெயில், தாம்பரத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும்.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை பயணிகள் சிறப்பு ரெயில், செங்கல்பட்டில் இருந்து காலை 9.25, மதியம் 1.15 மற்றும் மாலை 5.15 மணிக்கு புறப்படும்.

 சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பயணிகள் சிறப்பு ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.15 மற்றும் மதியம் 3.08 மணிக்கு புறப்படும்.

சென்னை கடற்கரை-தாம்பரம் பயணிகள் சிறப்பு ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.30, 9.55 மணிக்கு புறப்படும்.

தாம்பரம்-சென்னை கடற்கரை பயணிகள் சிறப்பு ரெயில், தாம்பரத்தில் இருந்து இரவு 8.35 மணிக்கு புறப்படும்.

சென்னை மூர்மார்க்கெட்-திருவள்ளூர் பயணிகள் சிறப்பு ரெயில், சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்படும்.

திருவள்ளூர்-மூர்மார்க்கெட் பயணிகள் சிறப்பு ரெயில், திருவள்ளூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படும்.

மூர்மார்க்கெட்-ஆவடி பயணிகள் சிறப்பு ரெயில், மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 1.35 மற்றும் 3.20 மணிக்கு புறப்படும்.

ஆவடி-மூர்மார்க்கெட் பயணிகள் சிறப்பு ரெயில், ஆவடியில் இருந்து மதியம் 2.25 மற்றும் மாலை 4.15 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது