பேருந்து கட்டணம் உயர்வு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

சென்னை:

மிழக சட்டபேரவையில் இன்று போக்குவரத்து துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது.

இன்று காலை புதிய 515 பேருந்து சேவைகளை  தமிழக முதல்வர் இயக்கி வைத்த நிலையில், பேருந்து கட்ட உயர்வு குறித்து விவாதம் நடைபெற்றது.

இன்று சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது,  திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பேருந்து கட்டண உயர்வு குறித்து  கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், டீசல் விலை உயர்வு, ஊழியர்கள் சம்பளம் உட்பட தவிர்க்க முடியாத காரணத்தால் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,  தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்திய பின்பும்,  டீசல் லிட்டருக்கு ரூ.8 உயர்ந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர்,  கடந்த 6 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும், திமுக ஆட்சியின்போதுதான்  பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது என்றும் கூறினார்.