பேருந்து கட்டணம் உயர்வு: மெட்ரோ ரெயிலில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

சென்னை,

பேருந்து கட்டணம் உயர்வு காரணமாக பெரும்பாலான மக்கள் ரெயில் பயணங்களை  நாடி உள்ளனர். இதன் காரணமாக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ரெயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயிலிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இதையடுத்து, இன்று முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் எனவும், இரவில் கூடுதல் நேரம் இயக்கப்படும் எனவும்  மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்,  கூட்ட நெரிசல் ஏற்படுதால், அதை கட்டுக்குள் கொண்டுவரவும், பயணிகளின் பயணத்துக்கு உதவிடும் வகையிலும், முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம்  கூறி உள்ளது.