திருவனந்தபுரம்:

கேரளாவில் பஸ் கட்டணத்தை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த மாதம் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் கடந்த மாதம் 20ந்தேதி தமிழக அரசு திடீரென பேருந்து கட்டணத்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட மாணவ மாணவிகளிடையே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து தற்போது கேரளாவிலும் பேருந்து கட்டணத்தை உயர்த்த கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இன்று நடைபெற்ற கேரள மாநில  அமைச்சரவை கூட்டத்தில், பேருந்து கட்ட உயர்வு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி சுமார் 25 சதவிகிதம் அளவுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்த பிரனாயி விஜயன் தலைமையிலான அரசு  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவில் தற்போது குறைந்த அளவிலான பேருந்து கட்டணம் 7 ரூபாயிலிருந்து 8 ரூபாயாக உயர்த்த  அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த பதிய பேருந்து கட்டணம் வரும் மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் கேரள அரசு அறிவித்துள்ளது.