அம்பேத்கார் சிலை அவமதிப்பு : திண்டிவனத்தில் கலவரம்

திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அம்பேத்கார் சிலை அவமதிக்கப்பட்டதால் எழுந்த கலவரத்தில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் திண்டுக்கல் அருகே உள்ள சிறுவாடி-முறுக்கேறி சாலையில் ஒரு அம்பேத்கார் சிலை உள்ளது.   இந்த சிலைக்கு நேற்று இரவு சிலர் செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.  இதனால் இந்தப் பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டது.  சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

இந்த தகவல் மாவட்டம் முழுவதும் பரவியதால் பல இடங்களில் போராட்டம் தொடங்கியது.   திண்டிவனம் மேம்பாலம் அருகே சிலர் கலவரத்தில் ஈடுபடுள்ளனர்.  அவர்கள் சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்துகளில் மீது கல் வீசி உள்ளனர்.  இதனால் 5 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைபட்டன.   அத்துடன் அருகில் இருந்த வணிக நிறுவனங்கள் மீதும் கல்வீச்சு நடந்துள்ளது.

அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.   அம்பேத்கார் சிலையை அவமதித்தவர்களையும், கல்வீசி கலவரம் செய்தவர்களையும்,  காவல் துறையினர் தேடி வருகின்றனர்.