சென்னை: செப்டம்பர் 7ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், வரும் 7ம் தேதி முதல் தமிழகத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பொதுஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி செப்டம்பர் 1ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பொதுப்போக்கு வரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர்.  மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கினால், தனியார் பேருந்துகள் இயங்கம் என அறிவித்தனர்.

இதையடுத்து, மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி  வழங்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வரும் 7ம் தேதி முதல் தமிழகத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவித்து உள்ளார்.