பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், ஊரடங்கு தளர்வையடுத்து, அங்கு முதற்கட்டமாக 4000 பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகத்தில் தமிழகத்திற்கு முன்பாகவே மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதேபோன்று, தற்போது பேருந்துகள் சேவையும் முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்டது.
நிலைமையைப் பொறுத்து, இம்மாத இறுதிக்குள்ளாகவே, பேருந்துகள் இயக்கத்தை 100% அளவில் முழுமைப்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கட்டடப் பணி செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, ஊரடங்கு காலத்தில் முறையான வசதிகளை செய்துகொடுக்காமல், கட்டுமான முதலாளிகளின் பேச்சைக் கேட்டு, அவர்களை வெளியேறவும் விடாமல் தடுத்ததாக அம்மாநில பாரதீய ஜனதா அரசின் மீது புகார் எழுந்தது நினைவிருக்கலாம்.