சென்னை,

மிழகம் முழுவதும் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியதற்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த  தமிழக கூட்டுறவுத்துறை  அமைச்சர் செல்லூர் ராஜு,  தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.

இந்தக் காலத்தில் பிச்சைக்காரர்கள் கூட ஒரு ரூபாய் போட்டால் வாங்க மறுக்கிறார்கள். அப்படிப்பட்டசூழலில், மிகவும் குறைவான அளவில் உயர்த்தப்பட்ட பேருந்து  கட்டண உயர்வை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர் என்று கூறினார்.

தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அரசியலாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களின் ரஜினி, கமல் கட்சி குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர்  புதிதாக கட்சி தொடங்கவுள்ள நடிகர்கள் ரஜினி, கமல் நாட்டிற்கு என்ன நன்மை செய்தார்கள் என்று கேள்வி எழுப்பினார். தமிழக  மக்கள் ஏமாளிகள் அல்ல என்றும்  அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.