புதுச்சேரி வழியாக செல்லும் பேருந்துகள் இடமாற்றம்

சென்னை

சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வழியாக செல்லும் பெருந்துகள் இனி கே கே நகர் நிலையத்தில் இருந்து கிளம்ப உள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பெருந்து நிலையம் ஆகும். ஆயினும் இந்த பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பேருந்துகள் தாமதம் ஆகி வருகின்றன.

இந்த நேரத்தை சரி செய்ய ஓட்டுனர்கள் வேகத்தை அதிகரிப்பதால் விபத்துக்கள் உண்டாகின்றன.    அதை தவிர்க்க போக்குவரத்து கழகங்கள் ஆலோசனை செய்து வந்தன,

அவ்வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆயினும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. எனவே மேலும் ஒரு மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வழியாக செல்லும் பேருந்துகளை கே கே நகர் நிலயத்துக்கு அரசு போக்குவரத்துக் கழகம் மாற்றி உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் 182 பேருந்துகள் இனி கேகே நகர் பேருந்து நிலயத்தில் இருந்து கிளம்ப உள்ளன.