சென்னை

மிழகம் மற்றும் ஆந்திரா இடையே வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை இயங்க உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 24 முதல் கொரோனா அச்சுறுத்தலல நாடெங்கும் முழு ஊரடங்கு அமலானது.   இதையொட்டி மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சேவைகள் இயக்கம் நிறுத்தப்பட்டது.   அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டு பேருந்து சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டிருந்தன.

அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சரக்கு வாகனங்கள், ரயில், விமானங்கள் என படிப்படியாகப் போக்குவரத்து சேவைகள் இயங்கத் தொடங்கின.  ஆயினும் பேருந்து சேவை தொடங்கப்படவில்லை.  செப்டம்பர் 7 முதல் தமிழகத்துக்குள் மாவட்டங்கள் இடையே குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம் ஆரம்பித்தது.   அக்டோபர் 31 முதல் இ பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்குப் பேருந்துகள் இயங்கி வருகின்றன.

அடுத்ததாக நவம்பர் 16 முதல் கர்நாடகா மாநிலத்துக்குப் பேருந்துகள் இயக்கம் ஆரம்பித்துள்ளன.  தற்போது ஆந்திர முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகம் ஆந்திரா இடையே இ பாஸ் இல்லாமல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி அழிக்கப்பட்டுள்ளது.  இந்த சேவை 25 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.