டில்லி:

த்தியஅரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில்,  பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக 70 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களவையில் இன்று 2019-20ம் ஆண்டுக்கான  மத்திய பட்ஜெட்  நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமனால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக 70 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மூலதன நிதி எந்த வங்கிக்கு எவ்வளவு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து, மத்திய  அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் கூறி உள்ளார்.

மேலும், செயல்படாத வங்கிக் கணக்குகளை கண்காணித்தன்மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்காக ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.