பெங்களூர்: புத்தாண்டு அன்று ஆன்லைனில் உணவு வாங்கியோர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளனது. இதன் காரணமாக ஓட்டல்களில் ரூ.100கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

விடுமுறை தினங்கள், விசேஷ தினங்களில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் சென்னை உள்பட நகரப்பகுதிகளில் கடுமையாக உயர்ந்து வருகிறது.  பெரும்பாலானவர்கள் விசேஷ தினங்களில், வீட்டில் சமைத்தை தவிர்த்து, ஆன்லைன் மூலம் ஓட்டல்களில் தங்களுக்கு வேண்டிய உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (புத்தாண்டு) தினத்தன்று, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், தேவையான உணவு வகைகளை விரும்புகின்ற ஓட்டல்களில்  வாங்கியது பல மடங்கு அதிகரித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இந்த உணவுகளை டெலிவரி செய்யும்,  சுவிக்கி நிறுவனத்துக்கு மட்டும் ஒரு நிமிடத்துக்கு 5,500 ஆர்டர்கள் என்ற விகிதத்தில் ஆர்டர்கள் பதிவாகி இருப்பதாகவும்,  சுமோட்டோ நிறுவனத்துக்கு நிமிடத்துக்கு 4,254 ஆர்டர்கள் என்ற விகிதத்தில் ஆர்டர் பதிவாகி இருந்தது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக, சுவிக் கி நிறுவன உரிமையாளர் தியேந்தர் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், புத்தாண்டு தினத்ததன்று, ஆன்லைன் ஆர்டர்கள் மூலம்  ஓட்டல்களில் ரூ.100 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளைவிட ரூ.25 கோடி அதிகமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆன்லைன் ஆர்டர்களில்   20 ஆயிரம் பிரியாணி மற்றும் 16 ஆயிரம் பீட்சா வகைகள் என்றும், இரவு உணவு ஆர்டரை பொறுத்தவரை 200 சதவீதம் அதிகமாக இருந்துள்ளது. குறிப்பாக ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் 200 சதவீதம் அதிகமாகவும், பெர்சாம்புர், ரூர்கேலா, கரீம்நகர் ஆகிய நகரங்களில் 150 முதல் 200 சதவீதம் அதிகமாக இருந்தது என்பதை விவரித்து உள்ளார்.

இந்த ஆர்டர்களுக்கு வீடு வீடாக கொண்டு உணவு சப்ளை செய்யும் பணியில் புத்தாண்டு தினத்தன்று மட்டும்  1 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டனர் என்றும் தெரிவித்து உள்ளார்.

பொதுவாகவே ஊரடங்கு அமலுக்கு வந்தபிறகு ஆன்லைனில் உணவு வாங்கும் பழக்கம் நகர்ப்புற மக்களிடையே அதிகரித்து இருப்பதாக சுமோட்டோ, சுவிக்கி நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.