7 நாட்களுக்கு 7ரோல்ஸ் ராயல்ஸ் காரில் பயணிக்கும் பிரபல தொழிலதிபர்!

லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரூபன் சிங் என்ற தொழிலதிபர் ஏழு நாட்களுக்கு ஏழு ரோல்ஸ் ராயல்ஸ் காரை பயன்படுத்தி பிரபலமடைந்துள்ளார். ரோல்ஸ் ராயல்ஸ் காரில் இருந்தபடி ரூபன் சிங் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

royals

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரூபன் சிங் என்பவர் லண்டனில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2000ம் ஆண்டு ’த சண்டே டைம்ஸ்’ என்ற பத்திரிக்கை ரூபன் சிங்கிற்கு ரூ.738 கோடிக்கு சொத்து இருப்பதாக தகவல் வெளியிட்டதுடன் அவரை ‘பிரிட்டிஷ் பில்கேட்ஸ்’ என்றும் புகழந்தது.

அந்த அளவிற்கு கோடீஸ்வரான ரூபன் சங் நகை கலெக்‌ஷன் என்ற பெயரில் தற்போது மாணிக்கம், மரகதம், நீலம் உள்ளிட்ட நிறங்களில் புதிதாக ரோல்ஸ் ராயல்ஸ் கார்களை வாங்கியுள்ளார். ஏனெனில் ரூபன் சிங்கிற்கு ரோல்ஸ் ராயல்ஸ் கார்கள் மீது அளாதி பிரியம். 42 வயதாகும் இவர் சீக்கிய கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

அதுமட்டுமின்றி ரோல்ஸ் ராயல்ஸ் சேலஞ்சை ஏற்ற ரூபன் சிங் வாரத்தின் ஒவ்வொரு நாளும் தனது டர்பனுக்கு ஏற்றார் போல் கார்களை வாங்கி அதில் பயணித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்க்ளை அவரே இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரோல்ஸ் ராயல்ஸ் காரில் இருந்தபடி ரூபன் சிங் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது அதிகமாக வைரலாக்கபட்டு வருகிறது.