லண்டன்:

வங்கி மோசடி வழக்கு தொடர்பாக இந்தியாவுக்கு அனுப்பும் இங்கிலாந்து அரசின் உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய விஜய் மல்லையாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு, விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பியோடினார்.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் கடனை திருப்பித் தர தன்னை மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்றும் விஜய் மல்லையா கூறிவருகிறார்.

இந்நிலையில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய, தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு இங்கிலாந்து அனுமதியளித்தது.

இது குறித்து சட்ட நிபுணர்கள் கூறும்போது, கீழ் கோர்ட்டில் விஜய் மல்லையா தாக்கல் செய்த சாட்சியங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், வெஸ்ட்மாஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மல்லையாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

பொதுநலன் இருந்தால் மட்டுமே இதுபோன்ற அப்பீல் வழக்குகளுக்கு இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கும்.

அதனால் உச்ச நீதிமன்றத்தை மல்லையா அணுகியிருக்கிறார். இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தையும் விஜய் மல்லையா அணுகியுள்ளார் என்றனர்.