டில்லி,
கை வாங்கும் பொதுமக்கள் கண்டிப்பாக ‘பான் கார்டு’ எண் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தங்கம் விலை திடீர் உயர்வு காரணமாக, மத்திய அரசு  அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. நகை வாங்க பான் கார்டு கட்டாயம்  தேவை என்று  வருவாய்த்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
gold1
கடந்த 8ந்தேதி இரவு முதல் புழக்கத்தில் இருந்த  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அன்று இரவு அறிவிப்பு வெளியானதால், பெரும்பாலானவர்கள் அன்று இரவே  நகை கடைகளுக்கு சென்று பழைய நோட்டுகளை கொடுத்து தங்கமாக வாங்கினர்.
இதன் காரணமாக நகை கடைகளில் கூட்டம் அலை மோதியது. அதையடுத்து, தங்கத்தின் விலை அதிரடியாக 1500 ரூபாய் சவரனுக்கு உயர்ந்தது.
மேலும் பல கடைகளில் பழைய நோட்டுகளை வாங்கிக்கொண்டு கூடுதல் விலைக்கு தங்க நகைகள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.
pan-card1
 
இதை தொடர்ந்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இதுகுறித்து,  மத்திய வருவாய்த்துறை அனைத்து  நகைக்கடைகளுக்கும்  உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.
அதில்,  நகைக்கடைகளில் நகை வாங்கும் அனைவரும் தங்களது பான் கார்டு விவரத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களிடம் பான் கார்டு தகவல்களை பெறாமல் அவர்களுக்கு நகைகளை விற்க கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் நகைக்கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.