Random image

‘பெட்ரோல் நிரப்பினால் பைக் இலவசம்’: ம.பி. பங்க் உரிமையாளர்கள் நூதன பிரசாரம்

போபால்:

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. விரைவில் லிட்டர் விலை ரூ.100 தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பெட்ரோல் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பெட்ரோல்  நிரப்பினால் பைக் இலவசம் என்று மத்திய பிரதேச மாநில பெட்ரோல் அதிகரிக்க பங்க் உரிமையாளர்கள் நூதன விளம்பரம் வெளியிட்டு உள்ளனர்.

உயர்ந்து பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதை மத்திய மாநிலஅரசுகள் ஏற்க மறுத்து வருகின்றன. மேலும், பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியஅரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

நாடு முழுவதும் விற்கப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலையில், மத்திய பிரதேச மாநிலத்தின்தான் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக அங்குள்ள மாநில எல்லையோர மக்கள், பக்கத்து மாநிலங்களுக்கு சென்று பெட்ரோல், டீசல் வாங்கி வருகின்றனர். இதனால் அங்கு விற்பனை சரிவை எட்டியுள்ளது.

இந்த நிலையில், விற்பனையை அதிகரிக்க பங்க் உரிமையாளர்கள் இலவசங்கள் வழங்கப்படுவதாக அறிவித்து உள்ளனர்.

கனரக வாகனங்களுக்கு 100 லிட்டர் பெட்ரோல் நிரப்பினால் டிரைவருக்கு உணவும், தேனீரும் இலவசமாக வழங்கப்படும். ‘

5 ஆயிரம் லிட்டர் நிரப்பினால் சைக்கிள்.

50 ஆயிரம் லிட்டர் நிரப்பினால் ஏசி அல்லது லேப்டாப்

1 லட்சம் லிட்டர் நிரப்பினால் மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான் வாட் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பங்க் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

துணிக்கடை, நகைக்கடை போன்று தற்போது பெட்ரோல் பங்குகளும் இலவசங்களை அறிவித்துள்ளது பெரும் வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.