கோவா மாநாடு : 2023க்குள் இந்து ராஷ்ட்ரா

னாஜி, கோவா

கோவாவில் இந்து ஜான்க்ரிதி சமிதி நடத்தும் மாநாட்டில் 2023க்குள் இந்தியாவை இந்து ராஷ்ட்ரா ஆக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

மாநாட்டில் 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், இந்தியா, பங்களாதேஷ், நேப்பாள், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலிருந்து கலந்துக் கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் தற்போது கோவாவில் முக்கிய பிரச்னையாக உள்ள மாட்டிறைச்சி தடை உட்பட பல பிரச்னைகள் விவாதிக்கப்படும்

இந்தியாவை வல்லரசாக்க, அதை இந்து ராஷ்ட்ராவாக மாற்ற வேண்டும்.

இந்தியா முழுவதும் பசுவதைச் சட்டம் அமல் படுத்தப்பட்டு பசு பாதுகாப்பு இல்லங்கள் நிறுவப்பட வேண்டும்.

உண்மையான இந்துவாக வாழ, பசுவதையை தடுப்பு  ஆலயங்கள் பாதுகாப்பு, லவ் ஜிஹாத்துக்கு எதிரான போராட்டம்,  பங்களாதேஷ் ஊடுருவிகளை விரட்டுதல் ஆகியவை மிக முக்கியம்

இவைகளே மாநாட்டின் முக்கிய தீர்மானங்கள் என தெரிவித்தனர்.

மேலும் கூறுகையில் சுதந்திரம் அடைந்த உடனேயே மாட்டுக்கறி தடை சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என காந்தியடிகள் கூறி உள்ளதால், காந்தியின் ஆதரவாளர்கள் அனைவரும் மாட்டுக்கறி தடையையும் ஆதரிக்க வேண்டும் என கூறினார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published.