டில்லி

ரும் ஆகஸ்ட் 20க்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சம் ஆகி விடும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதுவரை 1 மில்லியனுக்கும் அதாவது 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு பல முயற்சிகளை எடுத்து வந்தும் பயனில்லாமல் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.  கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி மொத்த பாதிப்பு 8 ல்ட்சமாக இருந்தது  அந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 9 லட்சமாக உயர்ந்து இன்றைய காலை நிலவரப்படி மேலும் 1 லட்சம் அதிகரித்து 10 லட்சம் ஆகி உள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “கொரோனா பாதிப்பு தற்போது 10 லட்சத்தைத் தாண்டி உள்ளது.க்  இதே வேகம் நீடித்தால் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் பாதிப்பு 20 லட்சம் ஆகி விடும்.  அரசு இந்த பரவலை தடுக்க சரியான மற்றும் கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என இந்தியில் பதிந்துள்ளார்.