சென்னை

டந்த பிப்ரவரி மாதம் மோடிக்கு ஆதரவாகவும் எதிராகவும் டிவிட்டரில் டிரெண்டான ஹேஷ்டாகுகள் அனைத்தும் போலிக் கணக்குகள் மூலம் மற்றும் தானியங்கி செயலிகள் நடத்தப்படுள்ளன.

பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுகு வந்த போது அவரை எதிர்த்து டிவிட்டரில் #கோபேக்மோடி என்னும் ஹேஷ்டாக் மிகவும் டிரண்டானது. பாஜக ஆதரவாளர்கள் அந்த ஹேஷ்டாக்கை எதிர்த்து #டிஎன்வெல்கம்ஸ்மோடி என்னும் ஹேஷ்டாகை டிரெண்டாக்கினார்கள். இரு தரப்பில் இருந்தும் ஏராளமான பதிவுகள் வந்தன.

இது குறித்து அமெரிக்க நிறுவனமான (டிஜிடல் ஃபாரென்சிக் ரிசர்ச் லாப்) என்னும் ஆய்வு நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 9-10 ஆம் தேதிகளில் பதியப்பட்ட பதிவுகள் குறிந்து ஆராய்ந்துள்ளது. அப்போது இந்த இரு தரப்பு பதிவுகளுமே ஒரு சிறு குழுவினால் போலி கணக்குகள் மூலமும் தானியங்கி செயலிகள் மூலமும் பதியப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

டி ஆர் எஃப் லாப், “இரு புறமும் செயலிகள் பயன்படுத்தப் பட்ட போதிலும் மோடிக்கு ஆதரவான பதிவுகள் விரைவாக பதியப்பட்டுள்ளன. நாங்கள் நடத்திய ஆய்வில் ஒரு க்ணக்கில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் பதியப்படும் பதிவுகளின் எண்ணிக்கையை கொண்டு இதை கண்டறிந்தோம். ஆயினும் இந்த செய்திகள் போலி கணக்குகள் மூலம் பகிரப்பட்டதால் பலரை சென்றடையவில்லை என கூற வேண்டும்.

எங்கள் ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டதில் 48727 டிவீட்டுகள் மிகக் குறைந்த நேரத்தில் பதியப்பட்டவை அதாவது ஒரு நிமிடத்தில் 123.98 டிவீட்டுகள் மூலம் வெகு விரைவில் ஒரு சிறு குழுவால் பதியப்பட்டுளன. சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 12 அல்லது அதற்கும் குறைவாகவே டிவீட்டுகள் பதிவாகும். ஆனால் இந்த இரு தரப்பும் மிக அதிகமாக டிவிட்டுகலை பதிவு செய்துள்ளன.

இவற்றை ஒப்பிடும் போது #டிஎன்வெல்கம்ஸ்மோடி என்னும் ஹேஷ்டாக் டிவிட்டுகள் மிக வேகமாக பதியப்பட்டதால் ஒரே நேரத்தில் மொத்த டிவிட்டுகளில் மூன்றில் இருபங்குக்கு மேல் பதியப்பட்டுள்ளன.

மோடிக்கு எதிரான #கோபேக்மோடி என்னும் டிவிட்டுகளும் இது போல போலிக் கணக்கு குழுக்கள் மூலமே பதிவிடப்பட்டுள்ளன.  இந்த டிவிட்டுக்கள் நிமிடத்துக்கு 46.81 டிவிட்டுகள் வேகத்தில் பதியப்பட்டுள்ளன.