வாட்ஸ்அப் வதந்தி : 3 பேர் மீது கும்பல் தாக்குதல்

பால்கர்

காராஷ்டிர மாநிலத்தில் வாட்ஸ் அப் வதந்தியை நம்பி ஒரு கும்பல் 3 பேரைத் தாக்கி உள்ளது.

கொரோனா தாக்கத்தால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   இதனால் பலரும் பணி இழந்துள்ளனர்.   இவ்வாறு பணி இழந்தோரில் பலருக்கு உணவு கிடைப்பது பெரும்பாடாக உள்ளது.   இவர்கள் தங்களுக்கு உணவு கிடைக்காததால் நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஊர்களில் புகுந்து கொள்ளை அடித்து வருவதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் வதந்திகள் வேகமாகப் பரவியது.

இதை உண்மை என நம்பிய பலரில் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் என்னும் ஊர் மக்களும் அடங்குவார்கள்.  ஏற்கனவே ஊரடங்கால் அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் இந்த மக்கள் அவதியில் உள்ளனர்.  இந்நிலையில் இந்த வதந்தி கிளம்பி உள்ளது.  மும்பையைச் சேர்ந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் மூவர்  நடந்தே தங்கள் ஊருக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.

அவர்களை திருடர்கள் என நினைத்த பால்கரை சேர்ந்த ஒரு கும்பல் சரமாரியாகத் தாக்கத் தொடங்கி உள்ளது.   அப்போது அந்த வழியாக வந்த காவல்துறை ரோந்து வாகனம் அதைக் கண்டு அவர்களைத் தடுக்க  முயன்றுள்ளனர்.  அந்த கும்பல் அவர்களைக் கல் வீசி விரட்டி அடித்துள்ளது.  அதன் பிறகு அவர்கள் ஒயர்லெஸ் மூலம் காவல்துறை தலைமையகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து ஆயுதங்களுடன் வந்து அடிபட்டோரை மீட்டுள்ளனர்.  காவல்துறையினர் அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.   அடிதடியை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள் மீது விரைவில் வழக்குப் பதிய உள்ளது.     இதையொட்டி பால்கர் காவல்துறையினர் வதந்திகளை நம்ப வேண்டாம் என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்க்ளில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You may have missed