நான் உடலால் திபேத்தியன் ஆனால் ஆன்மீகத்தால் இந்தியன் : தலாய் லாமா

புத்த கயா

தாம் உடலால் திபேத்தியன் ஆக இருந்தாலும் ஆன்மீகத்தால் இந்தியன் என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

புத்த மத தலைவர்களில் ஒருவர் தலாய் லாமா.   இவர் பீகாரில் உள்ள புத்த கயாவுக்கு வந்திருந்தார்.   புத்த கயாவில் உள்ள போதிமரத்தடியில் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு புத்தருக்கு ஞானம் கிடைத்தது.   அதனால் அந்த மரத்தை ஒரு புனிதமானதாக புத்தர்கள் கருதுகின்றனர்.    தலாய் லாமா அந்த போதி மரத்தடியில் வழிபாடு நடத்தினார்.

புத்த மத கோட்பாடுகளை பரப்பும் கல்வி நிலையமான கர்ம காயு பள்ளியில் தலைமை இடத்துக்காக ஒஜியன் டிரின்லி தொர்ஜி மற்றும் டிரின்லி தாயே தொர்ஜி ஆகிய இருவருக்கிடையே போட்டி நிலவுகிறது.   புத்தகயாவில் தலாய் லாமாவை டிரின்லி தாயே தொர்ஜி சந்தித்துள்ளார்.   கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறி தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் ஒஜீயனுக்கு தலாய் லாமா ஆதரவளித்திருந்தார்.

தலாய் லாமாவை செய்தியாளர்கள் சந்தித்தனர்.   அப்போது தலாய் லாமா, “என்னுடைய 84 வயதுக்கு நான் மிகவும் ஆரோக்யமாக் ஐருக்கிறேன்.  தினமும் காலையில் 600 படிகள் ஏறி இறங்குகிறேன்.   கர்ம காயு பள்ளியின் தலைமை பொறுப்பு ஒஜியனுக்கே உரியது.    தற்போது அவருக்கு இந்தியா வர விசா கிடைக்கவில்லை.   ஆகையால் நான் டிரின்லியை சந்தித்தேன்.

இது குறித்து ஏராளமான அரசியல் கருத்துக்கள் நிலவுகின்றன.   நான் இப்போது எதுவும் சொல்ல முடியாது.   நான் அரசியலில் இருந்து விலகி பல நாட்கள் ஆகிறது.   நான் தற்போது ஆன்மீக வழியில் செல்கிறேன்.   நான் உடலால் திபெத்தியன் என்றாலும், ஆன்மீகத்தால் இந்தியன்.   எனவே திபெத் குறித்து நான் எதுவும் செய்ய முடியாது. ” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: dalai lama, indian, Tibetian
-=-