திக்விஜய் சிங் இல்லம் : சிவராஜ் சிங் உத்தரவை மாற்றிய கமல்நாத்

போபால்

பாஜக முதல்வர் சிவராஜ் சிங்  முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் இல்லத்தை காலி செய்ய சொன்ன உத்தரவை கமல் நாத் மாற்றி உள்ளார்.

மத்தியப் பிரதேச முன்னாள் காங்கிரஸ் முதல்வர் திக்விஜய் சிங் மற்றும் பாஜக அமைச்சர் உமாபாரதி  உள்ளிட்டோர் போபால் நகரில் உள்ள அரசு இல்லங்களில் வசித்து வந்தனர்.    உச்சநீதிமன்ற உத்தரவின் படி முன்னாள் அமைச்சர்கள் அரசு இல்லங்களில் வசிக்கக் கூடாது என சட்டக் கல்லூரி மாணவர் ரௌனக்  யாதவ் என்பவர் கடந்த 2017 ஆம் வருடம் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது வழக்கு மனுவில் அரசு இல்லங்களில் முன்னாள் அமைச்சர்கள் வசிப்பது தவறு எனவும் அரசு சொத்துக்களை அவர்கள் சட்ட விரோதமாக அனுபவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.     அத்துடன் அப்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இவர்களுக்கு அரசு இல்லத்தை உபயோகிக்க உத்தரவிட்டது  செல்லாது எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அதை ஒட்டி முன்னாள் காங்கிரஸ் முதல்வர் திக்விஜய் சிங் தனது இல்லத்தை காலி செய்ய வேண்டும் என சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டார்.   அத்துடன் தனக்கு இருந்த  சிறப்பு அதிகாரத்தை ஒட்டி பாஜக அமைச்சர்கள் இல்லத்தை காலி செய்ய வேண்டாம் எனவும் உத்தரவில் குறிப்பிட்டு  இருந்தார்.  அதை ஒட்டி திக்விஜய் சிங் போபால் நகரில் தாம் தங்கி இருந்த அரசு இல்லத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் காலி செய்தார்.

தற்போது ஆட்சி மாறி உள்ளதால் காங்கிரஸ் முதல்வர் கமல் நாத் மீண்டும் திக்விஜய் சிங் தாம் காலி செய்த இடத்தில் மீண்டும் வசிக்க உத்தரவிட்டுள்ளார்.   மேலும் திக்விஜய் சிங் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளதால் அவருக்கு அரசு இல்லத்தில் வசிக்க உரிமை உள்ளதாகவும் அதனால் சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்ட அதே சிறபு அதிகாரத்தை ஒட்டி இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.