சென்னை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் ஒரு ஆயுதப்படை வீரருக்கு மீண்டும் பணி அளிக்கப்பட்டுள்ளது.

தனி மனிதனுக்கும், அரசு ஊழியருக்கும் கடைசி புகலிடமாக நீதிமன்றமே உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு தீர்ப்பு இது:

மத்திய ஆயுத படை பிரிவில் காவலராக சேர்ந்து சென்னை ஆவடியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர், சரின் சிங்.

தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்துக்கு உதவியாக இருக்க அவர் 2002 ஆம் ஆண்டு மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி மின் சார கழக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சக போலீசாருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

வழியில் இவர்கள் வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

வாகனத்தை விட்டு கீழே இறங்கிய சரின், தீவிரவாதிகளை சுட குறி பார்த்தபோது, தவறுதலாக அருகேயுள்ள 12 ஆடி ஆழ சாக்கடையில் விழுந்து மயக்கம் அடைந்து விட்டார்.

தீவிரவாதிகள் தாக்குதலில் 7 காவலர்கள் உயிர் இழந்தனர்.

தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட தவறியதாக குற்றம் சாட்டி சரீனை வேலையை விட்டு நீக்கியது, ஆயுதப்படை போலீஸ் நிர்வாகம்.

உயர் அதிகாரிகளிடம் மேல்முறையூடு செய்யவும் அவர் அனுமதிக்கப்படவில்லை.

வேலை நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி சரீன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சரீனை மீண்டும் பணியில் சேர்க்க மத்திய ஆயுத படைக்கு ஆணையிட்டு தீர்ப்பு வழங்கியது