Random image

சீனாவின் வற்புறுத்தல் : தைவான் பெயரை நீக்கிய ஏர் இந்தியா

டில்லி

சீனாவின் வற்புறுத்தலுக்காக ஏர் இந்தியா தைவான் என்னும் பெயரை நீக்கி சைனீஸ் தாய்பெய் என மாற்றி உள்ளது.

சீனாவில் இருந்து பிரிந்துள்ளதாக தைவான் பகுதி அறிவித்துள்ளது.   சீனா அதை ஒப்புக் கொள்ளாமல் சீன நாட்டின் ஒருபகுதியாகவே தைவானை அறிவித்து வருகிறது.   பல நாட்டு விமான நிறுவனங்கள் தைவானை தனிப் பகுதியாகவே தங்கள் இணைய தளங்களில் குறிப்பிட்டுள்ளன.   அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இவ்வரிசையில் ஏர் இந்தியாவும் தனது இணைய தளத்தில் தைவான் என குறிப்பிட்டிருந்தது.   அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து அதை மாற்றுமாறு வற்புறுத்தியது  சீனாவின் வற்புறுத்தலுக்கிணங்க தைவான் என்னும் பெயரை ஏர் இந்தியா நிறுவனம் நீக்கி உள்ளது.   அதற்கு பதிலாக சைனீஸ் தாய்பெய் என மாற்றி உள்ளது.

இதைப் போலவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ், மற்றும் ஏர் கார்கோ ஆகிய விமான நிறுவனங்களையும் சீனா வற்புறுத்தி உள்ளது.  அந்த நிறுவனங்களும் தைவான் என்னும் பெயரை நீக்கி தாய்பெய் என மாற்றி உள்ளது.