கை தட்டுவதால் ஏழை தொழிலாளர் துயரம் தீராது : ராகுல் காந்தி

டில்லி

கொரோனாவால் ஏழை தொழிலாளர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பல தொழிலகங்கள் முடங்கி உள்ளன.   இதனால் பல தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள், மற்றும் கூலித் தொழிலாளிகள் பாதிக்கபட்டுளனர்.  இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,

“உடைந்து வரும் நமது பொருளாதாரத்துக்கு கொரோனா வைரஸ் ஒரு கடும் தாக்குதலாகி உள்ளது.

சிறிய, நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் தினக்கூலி ஏழைத் தொழிலார்க்ள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கை தட்டுவதால்  அவர்கள் துயரம் தீராது, அவர்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்காது.

இன்றைய நிலையில் ஒரு பெரிய பொருளாதார திட்டம் அதாவது ரொக்க உதவி, வரித் தள்ளுபடி மற்றும் கடன் தவணை தள்ளுபடி போன்றவை மட்டுமே அவர்களுக்குத் தேவை ஆகும்.

அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”

எனப் பதிந்துள்ளார்.