இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை:

மிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக அறிவித்துள்ள தேர்தல் பொறுப்பாளர்களுடன்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

தமிழகத்தில் ஏற்கனவே காலியாக இருந்ததிருப்பரங்குன்றம், திருவாரூர்  ஆகிய 2 தொகுதிகளுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தொகுதிகள் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதி களுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இதன் காரணமாக இப்போதே அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலை சந்திக்க களம் இறங்கி உள்ளன.

இந்த நிலையில்,  20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக கடந்த மாதம் 29ந்தேதி அறிவித்தது.  அதைத்தொடர்ந்து,  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக, காங்கிரஸ், அமமுக, மக்கள் நீதி மய்யம் போன்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இடைத் தேர்தலை சந்திக்க வியூகங்களை வகுத்து வரும் நிலையில், எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவது குறித்து அதிமுக பொறுப்பாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில்  இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.