தமிழக இடைத்தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை,

மிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் தேமுதிகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதன் காரணமாக 5 முனை போட்டி உருவாகி உள்ளது.

சட்டசபை தேர்தலின் போது ரத்து செய்யப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 2 தொகுதிகளுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற சீனிவேல் இறந்ததால் அந்த தொகுதிக்கும் நவம்பர் 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

3 தொகுதிகளிலும் அ.தி. மு.க., தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகியவை போட்டியிடுகிறது. இந்த 4 கட்சிகளும் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து விட்டது.

3 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் கடந்த 26-ந்தேதி  தொடங்கியது.

அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் 3 தொகுதியிலும் போட்டியிட தே.மு.தி.க. திடீரென முடிவு செய்துள்ளது.

இதற்கான வேட்பாளர்களை பட்டியலை விஜயகாந்த் இன்று அறிவித்தார்.

1. அரவக்குறிச்சி- அரவை எம்.முத்து

2. தஞ்சாவூர்- வி.அப்துல்லா சேட்

3. திருப்பரங்குன்றம்- தன பாண்டியன்.

dmdk

அரவக்குறிச்சி  தொகுதி வேட்பாளர் அரவை முத்து  கரூர்  மாவட்ட அவைத்தலைவராக இருந்து வருகிறார். இவர்  கடந்த 10  ஆண்டுகளாக  கரூர்  மாவட்ட துணைச் செயலாளராக  பதவி  வகித்துள்ளார்.  10-ம் வகுப்பு  வரை  படித்துள்ள இவர்  விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் தனபாண்டியன் கட்சியின் தெற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார்.

2006 பொதுத்தேர்தல், 2009 இடைத்தேர்தல் போன்றவற்றில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

தற்போது திருப்பரங்குன்றத்தில் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.விவசாய தொழில் செய்து வரும் தனபாண்டியன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் தீவிர ரசிகர்.

3 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிடுவதால் 5 முனை போட்டி உருவாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி