இடைத்தேர்தல் எதிரொலி: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைப்பதாக அறிவிப்பு!

சென்னை:

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெற உள்ள நிலையில்,  அக்டோபர் 6ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக  திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.

பொதுக்குழு நடைபெறும் தேதி பிறகு தெரிவிக்கப்படும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பணிகள் மேற்கொள்ளும் வகையில், பொதுக்குழுவை ஒத்தி வைப்பதாக திமுக தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.