மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொடங்கியது

--

பால்கர்

காராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு தொடங்கி உள்ளது.

மகாராஷ்டிராவின் பால்கர் தொகுதி மற்றும் உபி மாநில கைரானா தொகுதியின் மக்களவை உறுப்பினர்கள் மரணம் அடைந்தனர்.   மகாராஷ்டிராவின் பந்தாரா தொகுதி பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.  நாகலாந்தின் முதல்வர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.  இந்த 4 மக்களவை தொகுதிக்கும் இன்று இடைத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி உள்ளது.

இதே போல கேரளா, ஜார்கண்ட், மேகாலயா பீகார், மகராஷ்டிரா உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் தொடங்கி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் கட்டு கட்டாக வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   அதனால் இந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.   இன்று இந்த தொகுதியிலும் தேர்தல் தொடங்கி உள்ளது.