இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட பழைய நோட்டுகள்!

சென்னை,

மிழ்நாட்டில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அங்குள்ள வாக்காளர்களுக்கு செல்லாத ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல் நடக்கிறது. 5 முனை போட்டி நிலவுகிறது. இருந்தாலும் பிரதான கட்சிகளான  அ.தி.மு.க. – தி.மு.க. கடுமையான போட்டி நிலவுகிறது.

rupee6

ஏற்கனவே கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது மிக அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறி  தஞ்சாவூர் தொகுதியும், அரவக்குறிச்சி தொகுதிக்கும் தேர்தல் நிறுத்தப்பட்டது.

ஆனால் இப்போதும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு ஓட்டுப்போட பணம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அ.தி.மு.க. சார்பில் 2,000 ரூபாயும், தி.மு.க. சார்பில் 500 ரூபாயும் அளிக்கப்பட்டதாகவும்,  பெரும்பாலான வாக்காளர்கள் இரு கட்சிகளிடமும் பணம் வாங்கியதாகவும் செய்தி பரவியுள்ளது.

இரு கட்சிகளுமே பழைய நோட்டுகளை கொடுத்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத வாக்காளர்கள் சிலர்  நம்மிடம் தெரிவித்தார்கள்.