சென்னை,
மிழகம் மற்றும் புதுவை தொகுதியில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின்  அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும்  புதுவை நெல்லித்தோப்பு தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
voting1
அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கரூர் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
இதுபோல், தஞ்சாவூர் தொகுதியில் பதிவான வாக்குகள், அங்குள்ள குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியிலும்,
திருப்பரங்குன்றம் தொகுதியில்  பதிவான வாக்குகள், மதுரை மருத்துவக் கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் பதிவான வாக்குகள், அங்குள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி,  இந்த 4 மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த 4 மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதியத்திற்குள் வாக்கு முடிவு நிலவரம் தெரிய வரும் என்று தெரிகிறது.
இதேபோல், அசாம், மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 4 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 8 சட்டமன்றத் தொகுதிகளில், கடந்த 19-ம் தேதி பதிவான வாக்குகளும் நாளை எண்ணப்படுகின்றன.