வாஷிங்டன்

ரும் ஜூலை மாதத்துக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மைய தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

உலகெங்கும் அச்சுறுத்தி வ்ரும் கொரோனா தாக்குதல் அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளது.   பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 71.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 2.07 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் பணியில் பல உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.  அமெரிக்காவில் இந்த முயற்சி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் தற்போது ஃபிசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் இறுதிச் சோதனையில் உள்ளன.   இந்த சோதனை வெற்றி அடைந்த உடன் சட்ட அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.   இந்த அனுமதி கிடைத்த பிறகு அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் 5 கோடி டோஸ் மற்றும் டிசம்பர் இறுதிக்குள் 10 கோடி மற்றும் ஏப்ரல் மாதத்துக்குள் 70 கோடி டோஸ் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.

இது குறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மைய தலைவர் ராபர்ட் ரெட்ஃபீல்ட், “மார்ச் மாத இறுதிக்குள் 7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும் இது 35 கோடி மக்களுக்கு போதுமானதாக இருக்கும்.  எனவே கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணி வரும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் வரை தொடரும்.  ஜூலை மாதத்துக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடிவடைந்து விடும்.” எனத் தெரிவித்துள்ளார்.