டில்லி:

நாடு முழுவதும் கடந்த 28ந்தேதி நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.

இதில், மகாராஷ்டிர மாநிலம்  பலாஸ் கதேகான் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்வஜீத் பதாங்ரோவ் கதம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் காலியாக இருந்த 4 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும்  11 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அன்று பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து, 73 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மகாராஷ்டிர மாநிலம்  பலாஸ் கதேகான் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்வஜீத் பதாங்ரோவ் கதம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் 4 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையிலும் பாரதியஜனதாவே முன்னிலை வகித்து வருக்றது. ஆனால், சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.