டில்லி

னியார் நிறுவனமான ஸ்பேஸ் கிட்ஸ் இந்த மாத இறுதிக்குள் பகவத் கீதை புத்தகம் மற்றும் மோடியின் புகைப்படத்துடன் செயற்கைக் கோள் ஒன்றை செலுத்த உள்ளது.

இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் செயற்கைக் கோள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  அவ்வகையில் ஸ்பேஸ் கிட்ஸ் என்னும் நிறுவனம், ஒரு செயற்கைக் கோளை இந்த மாத இறுதிக்குள் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.   இந்த செயற்கைக் கோளுக்கு சதீஷ் தவான் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக் கோளில் பகவத்கீதை நூல், பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் 25000 பேருடைய பெயர்கள் ஆகியவை அனுப்பப்பட உள்ளன.  இந்த செயற்கைக் கோள் விண்வெளி கதிர்வீச்சு, காந்த மண்டலம், தகவல் தொடர்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனர் டாக்டர் ஸ்ரீமதி கேசன், “சதீஷ் தவான் செயற்கைக் கோள் தான் நாங்கள் விண்ணுக்கு அனுப்ப இருக்கும் முதல் செயற்கைக்கோள் ஆகும்   இந்த செயற்கைக்கோளில் விண்ணுக்கு அனுப்பப்பட வேண்டிய மக்களின் பெயர்கள் ஒரு வாரத்திற்குள் 25 ஆயிரம் பெயர்கள் கிடைத்தது. மக்களின்  ஆர்வத்தை விண்வெளி அறிவியலில் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது” என்று கூறி உள்ளார்

இஸ்ரோ இந்த செயற்கைக் கோள் வடிவமைப்பில் குறிப்பிட்டுள்ள மாற்றங்கள் தற்போது செய்யப்பட்டு வருகிறது.  அதன் பிறகு இந்த செயற்கைக் கோள் வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று ஸ்ரீஹரி கோட்டாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.   குறிப்பாக இந்த செயற்கைக் கோள் இயங்க தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி தகடுகள் மாற்றப்பட உள்ளன.