கன்யாகுமரி மாவட்டம் : இன்று மாலைக்குள் 60% மின் விநியோகம்

நாகர்கோயில்

ன்யாகுமரி மாவட்டத்தில் இன்று மாலைக்குள் 60% இடங்களில் மின் விநியோகம் சீராகி விடும் என தகவல் வந்துள்ளது.

புயல் மழையால் கன்யாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது.  மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின் விநியோகம் முழுமையாக பாதிப்பு அடைந்தது.  தற்போது சிறிது சிறிதாக சீர் செய்யப்படு வருகிறது.

நாகர்கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் 60% இடங்களில் இன்று மாலைக்கும் மின் விநியோகம் சீராகும் எனவும் நாளை மாலைக்குள் முழுமையாக மின் விநியோகம் சீராகும் எனவும் வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார்.

You may have missed