மும்பை:

பிரசித்திப்பெற்ற மும்பை பைகுல்லா மிருக காட்சி சாலையில் உள்ள பென்குயின்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில்  ரூ.10.57 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. இந்த வருமானம் அந்த பென் குவின்களை பார்க்க வந்த சுமார் 25 லட்சம் பார்வையாளர்களிடம் இருந்து வசூலாகி உள்ளது.

தென்கொரிய தலைநகர் சியோல் நகரில் இருந்து ‘ஹம்போல்டுட்’ வகை  8 பென்குயின்கள் மும்பையில் உள்ள ‘பைகுல்லா’ உயிரியல் பூங்காவுக்கு கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கொண்டு வரப்பட்டன. இதற்காக மும்பை பைகுல்லா உயிரியல் பூங்காவில், அதன் வாழ்விடத் துக்கு ஏற்ற மாதிரி  4 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட 250 சதுர அடி கொண்ட செயற்கை அமைப்பு உருவாக்கப்பட்டு, பிரத்யேக பயிற்சியாளர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பென்குயின்கள் மூன்று மாதம் பராமரிக்கப்பட்டபிறகு, 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பின்பு தான் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் ஒரு பென்குவின் 2016ம் ஆண்டு அக்டோபர் 23ந்தேதி அன்று பாக்டீரியா தொற்று காரணமாக இறந்தது, இது அரசியல் கட்சிகள் மற்றும் ஆர்வலர்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்தது. இறந்து விட்ட நிலையில் மீதமுள்ள குமிழி, மிஸ்டர் மோல்ட், டொனால்ட், டெய்ஸி, போபியே, ஆலிவ் மற்றும் ஃபிளிப்பர் ஆகிய ஏழு பெங்குவின்  இன்றுவரை  பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் பைகுல்லா மிருகக்காட்சிசாலையில் இந்த ஹம்போல்ட் ( Humboldt) பென்குவினை பார்க்கும் , பார்வையாளர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டி ரூ .10.57 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

மிருகக்காட்சிசாலையின் தரவுகளின்படி, கடந்த 2017ம் ஆண்டு  ஏப்ரல் 1ந்தேதி முதல் ஜூலை 2019 வரை, சுமார் 25,46,401 பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதன் காரணமாக ரூ. 10.57 கோடி ரூபாய் சம்பாதிக்க உதவியது.

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் மற்றும் மார்ச் 2018 க்கு இடையில், சுமார் 9.28 லட்சம் பார்வையாளர்கள்  இது மிருகக்காட்சிசாலையில் இந்த பென்குவினை பார்த்து ரசித்து உள்ளனர். இதன் காரணமாக  ரூ .3.78 கோடி வருவாய் ஈட்ட உதவி உள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 2018 மற்றும் மார்ச் 2019 க்கு இடையில் உருவாக்கப்பட்ட பார்வையாளர் களின் எண்ணிக்கை மற்றும் தொகை ஓரளவு அதிகரித்துள்ளது, 12.53 லட்சம் பார்வையாளர்களி டம் இருந்து ரூ .5.17 கோடி சம்பாதித்தது. மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்க ளுக்கு இடையில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1 லட்சம் பார்வையாளர்கள் வந்து, சுமார் ரூ .1.50 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது என்று மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதை காண வெறும் 34,400 பார்வையாளர்கள் மட்டுமே வந்துள்ளதாகவும், இதன் மூலம்  ரூ .15.67 லட்சம் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.