சென்னை: கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட சி.ஏ. இறுதித்தேர்வின் முடிவுகள் நேற்று(ஜனவரி 17) அன்று வெளியாகின.

கணக்கு தணிக்கையாளர்(Chartered Accountant) எனும் பணிக்கு தகுதிபெறுவதற்கான சி.ஏ. தேர்வு, இந்திய கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் மூலம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இறுதித்தேர்வில் பழைய பாடத்திட்டத்தில் 57 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். அதில் ஒருபிரிவில் 27% பேரும், இன்னொரு பிரிவில் 23% பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மொத்தமாக இரு பிரிவுகளிலும் சேர்த்து தேர்ச்சியடைந்தோர் எண்ணிக்கை 10% மட்டுமே.
புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுதியோர் எண்ணிக்கை 40 ஆயிரம். அதில், இரு பிரிவுகளிலும் தேர்ச்சியடைந்தோர் எண்ணிக்கை 15%.

பழைய பாடத்திட்டத் தேர்வைப் பொறுத்தவரை, ஆந்திராவின் விஜயவாடா, கேரளாவின் மன்னார்காடு மற்றும் மும்பை தேர்வர்கள் முதல் மூன்று இடங்களை வென்றுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை, கொல்கத்தா, நொய்டா மற்றும் அகமதாபாத் தேர்வர்கள் முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளனர்.