சிஏ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் கோரிக்கை

புதுடெல்லி:
ல இடையூறுகளுக்கு மத்தியில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது, அந்த சலசலப்பு தீர்வதற்கு முன்பே, இந்திய பட்டயக் கணக்காளர் ICAI தேர்வுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த தேர்வை ஒத்திவைக்குமாறு நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர், மேலும் ICAI உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் #postponeCAexams ஏன்ற ஹாஸ்டாக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

ஐசிஏஐ அறிவிப்பின்படி இந்தியாவில் பட்டய கணக்கியலில் இடைநிலை மற்றும் இறுதி படிப்புகளை தொடரும் மாணவர்களுக்கான தேர்வுகள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 18-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஏஐ இந்த அறிவிப்பை அக்டோபர் எட்டாம் தேதி வெளியிட்டது.

மத்திய அரசு இந்த தேர்வை நடத்துவதற்காக மாணவர்களுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் அதிகரித்து வருவதால் மாணவர்கள் இந்த தேர்வைஒத்தி வைக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.