சாம்பல், உத்தரப்பிரதேசம்

த்தரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துக் கொண்ட சமாஜ்வாதி கட்சி மக்களவை உறுப்பினர் உள்ளிடோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியதை அடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.   கடந்த 12 ஆம் தேதி இரவு அவர் ஒப்புதல் கையெழுத்திட்டதை அடுத்து இந்த மசோதா சட்டமாகி உள்ளது.

இந்த சட்டத்தை எதிர்த்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், டில்லி, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம்,  மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  அத்துடன் இந்த போராட்டங்களில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

நேற்று திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் சமாஜ்வாதி கட்சி மக்களவை உறுப்பினர் ஷபிகூர் ரகுமான் தலைமையில் போராட்டம் நடந்தது.  அந்த போராட்டத்தில் அங்கிருந்த அரசுப் பேருந்துக்கு தீவைக்கப்பட்டுள்ளது.  அதையடுத்து ஷபிகூர் ரகுமான் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.